அரசியல் கடமைகள் Political Obligations

அரசியல் கடமைகள்

Political Obligation என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அரசியல் கடமை என்னும் அரசியல் கட்டுப்பாடுகள் என்றும் பொருள் கூறலாம். குடிமக்களுக்கு பல்வேறு உரிமைகள் உள்ளது போல் அவ்வளவு கடமைகளும் குடிமக்களுக்கு உள்ளன. ஒரு நாட்டில் உயர்ந்ததாகக் கருதப்படுவது அரசாகும். அரசு உயர்ந்தது எனக் கருதுவதனால் அதில் வாழ்கின்ற மக்கள் அதற்குப் பணிந்து நடத்தல் வேண்டும். இங்கு பணிதல் என்பது கடமை என்ற பொருளிலே கையாளப் படுகின்றது. பணிந்து நடத்தலே மக்களின் முதன்மைக் கடமையாகும். அரசியல் கடமை என்று கூறுவதன் விளக்கம் மக்கள் அரசுக்கு பணிந்து நடந்து அதற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செவ்வனே ஆற்றுதல் வேண்டும்.

அரசியல் கடமைகள் குறித்து டி.டி. ரபேல் கருத்து:

அரசியல் கடமைகளை தார்மீகக் கடமை, சாதூர்யக் கடமை என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அரசியல் கட்டளைக்குப் பணிபவன் பணிய வேண்டியது தன் கடமையென உணர்ந்து விரும்பிப் பணிபுரியும் போது அவனது பணிவு தார்மீக கடமையால் வெளிப்படுகிறது. அரசின் கட்டளைக்குப் பணியத் தவறினாலோ, மறத்தாலோ எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நோக்குடன் அவற்றைத் தவிர்க்கும். நோக்கத்துடன் ஒருவன் பணி வினைத் தெரிவித்தால் அது சாதுரியக் கடமையாகும். ஏனெனில் எதிர்ப்புத் தெரிவித்தால் அவன் இயல்பாகப் பணியவில்லை. சாதுர்யமாகவே பணிகிறான். அரசியல் கடமைக்கு இயல்பாகத் தார்மீக அடிப்படை தான் உள்ளது.

தார்மீகக் கடமை என ரபேல் குறிப்பிடுவன :

டி.டி. ரபேல் ஐந்து வகையான கோட்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிபப்டையில் அரசியல் கடமைக்கான அறநெறி அடிப்படையை விளக்குகிறார். ரபேல் குறிப்பிடும் ஐந்து வகையான கோட்பாடுகள்

  1. சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு
  2. இசைவுக் கோட்பாடு
  3. பொது விருப்பக் கோட்பாடு
  4. நீதிக் கோட்பாடு
  5. பொது நலக் கோட்பாடு

என்பனவாகும். இக்கருத்துக்கள் சாக்ரடீசு, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் முதல் இந்த நூற்றாண்டின் பயனெறிக் கோட்பாட்டாளர்கள் வகையிலான அறிஞர்களின் கருத்துக்களாகும்.

1. சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு:

விருப்பத்தோடு நிறுவனம் ஒன்றில் பங்கு வகிக்கும் ஒருவன் அதன் விதிமுறைகளுக்கு பணிந்து நடப்பது போலவே அரசியல் கடமையும் ஓர் உறுதிமொழியின் அடிப்படையிலானது என்ற கருத்தினைச் சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு வலியுறுத்துகிறது. குடியுரிமை, ஒப்பந்தம், சமுதாய ஒப்பந்தம், அரசாங்க ஒப்பந்தம் என மூன்று வகையான ஒப்பந்தங்கள் கூறப்படுகின்றன. இம்மூன்று வகையான சமுதாய ஒப்பந்தங்களும் அரசியல் கடமையின் தன்மையினை விளக்கக் கூடியவை அல்ல.

2. இசைவுக் கோட்பாடு

ஓர் அரசனின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளக் குடிமக்கள் ஒப்பந்த வழியாக இசைவைத் தெரிவிக்காவிடினும் அவ்வாட்சியை எதிர்க்காமல் அச்சட்டங்களை மதிக்கின்ற காரணத்தால் இதனை ஒப்புதல் அல்லது இசைவு எனச் சிலர் கூறுவர். மக்களை அவர்களது வெளிப்படையான சம்மந்தமின்றிச் சட்டங்களக்குக் கீழ்படிய வைப்பது அடக்குமுறைக்கு ஒப்பானது ஆகும். இத்தகைய சூழ்நிலையில் அரசியல் கடமை இயல்பானதாக அமைவதில்லை என்பதால் இக் கொள்கையினையும் ஏற்பதற்கில்லை.

3. பொது விருப்பக் கோட்பாடு:

பொது விருப்பக் கோட்பாட்டினை விளக்கியவர் ரூசோ ஆவார். குடிமக்கள் அரசின் சட்டங்களுக்கு கீழ்படியக் காரணம் அச்சட்டங்கள் பொது விருப்பின் அடையாளங்கள் என்பதோடல்லாமல் பொது நலனை மேம்படுத்த அரசாங்கம் இன்றியமையாததாகிறது. எனவே, அவ்வரசாங்கத்தின் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது.

ரூசோவின் நோக்கம் மக்களின் சுதந்திரத்தையும் அரசின் ஆணை யுரிமையையும் இணங்க வைத்து விளக்குவதேயன்றி அரசியல் கடமையை விளக்குவதன்று. ரூசோவின் கோட்பாட்டின்படி அறநெறிக் கடமைக்கும், விருப்பத்திற்கும் வேறுபாடு இல்லை. ரூசோ தமது கோட்பாட்டினைத் தத்துவார்த்த அடிப்படையில் விளக்கியதால் அவரது கோட்பாடு தெளிவற்றதாக அமைந்து விட்டது. இக்கோட்பாட்டின் துணை கொண்டு அரசியல் கடமையின் தன்மையை எடுத்துரைக்க முடியாது.

4. நீதிக் கோட்பாடுகள்:

அரசை ஒரு கருவியாக ஏற்றுக் கொண்டு சமுதாயத்தின் பொது நலனை மேம்படுத்துவதில் அவரின் பங்கு என்ன எனும் அடிப்படையில் விளக்கம் தரும் கோட்பாடு

இக்கோட்பாடு ஆகும். ஜான்லாக் இக்கோட்பாட்டை இயற்கை உரிமை களின் கோட்பாடென விளக்குகிறார். இயற்கை உரிமைகள் முழுமையானவை அல்ல. இவை கற்பனையானவை என்றும் கூறப்படுகிறது.

5. பயனெறி முறைக் கோட்பாடு:

இக்கோட்பாடு அரசில் கடமையின் தன்மையினை விளக்கப் போதுமான ஒன்றாகும். இக்கோட்பாட்டின்படி அறநெறி அல்லது தார்மீகக் கடமைகளை மக்கள் அவைகளின் பயன்கருதி ஒப்புக் கொள்கின்றனர். மற்றவர்களது உரிமைகளைத் தம் உயிர் உடைமை ஆகியவற்றைப் பாதுகாத்தல் பொருட்டுக் காத்தல் தம் கடமையென மக்கள் ஒப்புக் கொள்கின்றனர். பயன்கருதி இக்கடமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது சமுதாயத்தின் பொதுநலன் பாதுகாக்கப்பட்டு மேம்படுகிறது. மிக அதிக அளவிலான மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கு தருவதே அரசின் நோக்கம். அத்தகைய அரசிற்கு பணிய வேண்டியது மக்களின் கடமை. அக்கடமையை அரசியல் கடமை எனலாம். ரபேல் பயனெறி முறைக் கோட்பாட்டையும், நீதிக் கோட்பாட்டையும் சேர்த்து விளக்கினால்தான் அரசியல் கடமையை விளக்க முடியும் என்று கருதினார்.

அரசுக்கு ஏன் கடமைப்பட்டவர்கள்:

அரசின் அறநெறிச் செயல்கள், அதனைத் தொடர்ந்து பொது நலனை மேம்படுத்தும் நடவடிக்ககைள் ஆகியவற்றுடன் சமுதாயத்தின் ஒப்புதல் அல்லது இசைவு, நீதியை நிலை நிறுத்தும் அரசின் பணிகள் ஆக இவையனைத்தும் ஒன்று சேர்ந்தே தார்மீகக் கடமைகள் அரசியல் கடமைகளாக்குகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் கருவியாக அரசு செயல்படக் குடிமக்களின் இசைவு இன்றியமையாதது. நாம் பிற சமுதாய உறுப்பினர்களுக்கு கடமைப் பட்டவர்களாகச் செயல்படும் போது இந்த நடவடிக்கைகளை முறைப்படுத்தும் அரசுக்கும் நாம் கடமைப்பட்டவர்களே என்று கூறப்படுகிறது.

சட்டவிதிகளுக்குக் கீழ்படியக் காரணம் Reasons for obedience to Law:

மக்களாட்சி முறை செயல்படத் தொடங்கியதாலும் மக்களுக்கு உரிமை வேட்கை ஏற்பட்டுள்ளமையாலும் இக் கேள்வியினை நன்கு ஆராய வேண்டி உள்ளது. மக்கள் சட்ட விதிகளுக்குக் கீழ்பணி உதவிடும் காரணங்களை இனி காண்போம்.

சமயம்:

பண்டைய இடைக்கால அரசுகளில் சமயம் ஒரு முதன்மைக் கூறாக விளங்கியது. சமயம் தனி நபர்களை அரசனின் விருப்பத்திற்குப் பணிந்தது. அவருடைய சட்டங்களுக்கு கீழ்படியச் செய்தது. பண்டைய அரசுகளில் மக்களின் மீது சமயத்தின் பிடிப்புப் பெரிதும் இருந்தது. சமயத் தலைவர்கள் அரசுக்குப் பணிய வேண்டாம் என்ற போது அவர்கள் கூறுவதற்குப் பணிந்தனர். அந்நாளில் மட்டுமின்றி இந்நாளிலும் சமயம் இஸ்ரேல், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் தலையாய கூறாக விளங்குகிறது.

அரசின் பயன் Utility of the State:

மக்கள் கீழ்ப் பணிந்து நடத்தலை அரசு விரும்புகிறது. அதனால் மக்கள் கீழ்பணிந்த நடக்கின்றனர். மக்களின் மேன்மைக்காகப் பல பணிகளை அரசு பங்கேற்கின்றது. எனவே, அரசின் பயன் கருதி மக்கள் சட்டவிதிகளுக்கு உடன்படுகின்றனர். மக்களுக்காகப் பல பணிகளை அரசு புரிந்து வருகின்றது. மக்கள் நலம் காண அரசு என்ற கொள்கை இன்று செல்வாக்குப் பெற்றுள்ளதால் மக்கள் நலத்திற்காக பல வழிகளை அரசு காண வேண்டியுள்ளது. இதனால் அரசு இன்றிமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது. அரசின் உறுப்பினர்களான மக்கள் அரசு இல்லாமல் நாகரீகமான மனிதர்களாக வாழ இயலாது என்பதனை உணர்ந்துள்ளனர். அரசு பல்வேறு கடமைகளை ஆற்றுகிறது. உயிர், உடைமை, சுதந்திரத்தைக் காப்பதோடல்லாமல் மக்கள் நலனையும் வளர்க்கிறது. அத்துடன் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. எனவே, அரிஸ்டாட்டில் மனிதனை ஓர் அரசியல் விலங்கு என்று குறிப்பிட்டார். எனவே, சட்டத்தையும் ஒழுங்கையும் அரசு ஒன்றினால் மட்டுமே பராமரிக்க முடியும்.

மரபு வழக்கம் Tradition:

ஆணைக்குக் கட்டுப்படுதல் ஒர் பழக்கமாகும். பொது நலத்திற்காக இயற்றப்பட்ட ஆணைக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும். மக்களின் நலனிற்காகவே அரசு ஆணை பிறப்பிக்கின்றது. எனவே, மரபு வழியாகவும் பழக்க வழக்கங்களிலும் மக்கள் அரசிற்குக் கட்டுப்படுகின்றனர். சூழ்நிலை மனிதனை அதிகம் தாக்கம் செய்கின்றது. ஓர் ஒழுங்கு முறைச் சமுதாயத்தில் மக்கள் சட்ட விதிகளுக்குக் கட்டுப்படுதல் ஓர் மரபாகவே நிலவி வந்துள்ளது. எனவே, மரபு வழியாக மக்கள் அரசின் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனர்.

தண்டனைப் பயம் Fear of Punishment:

நல்ல குடிமகனாக இருப்பதை நல்ல குடிமகன் வரவேற்கிறார். அரசுக்குக் கீழ்படிதலைச் சிலர் மகிழ்ச்சியைத் தராத துன்பத்தைத் தரும் கடமை என்று கருதினர். பின் ஏன் அவர்கள் சட்டத்திற்குப் பணிகின்றனர் என்ற கேள்விக்குத் தண்டனை பற்றிய அச்சமே காரணம் என்ற பதில் கிடைக்கிறது. தண்டனை பற்றிய அச்சம் மனிதன், விசுவாசம் ஆகியவற்றை மேற்கொள்ளச் செய்கிறது. சட்ட விதிகளை மீறுவோர்க்கு உரிய தண்டனைகளை ஒவ்வொரு நாளும் விதித்துள்ள. தண்டனைகளை நிறைவேற்றத் தக்கதொரு அமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது. மக்களில் பலர் தண்டனைப் பயத்தினால் சட்ட விதிகளக்கு அடங்கி நடக்கின்றனர்.

Other Reasons:

சட்டங்கள் சட்ட பூர்வமானவையாக, முறையானவையாக மக்களின் நன்மைக்காக அவை தோன்றிய அடிப்படை விளங்கிடுமாயின் அரசின் சட்டங்கள் பணிவையும் விசுவாசத்தையும் பெறும். இதனுடைய பொருள் அரசாங்கம் உருவாக்கும் சட்டங்கள் மக்களால் ஏற்கத்தக்கவையாகவும் பகுத்தறிவு அடிப்படையில் அதன் விதிகள் அமைந்தவையாகவும் விளங்கிட வேண்டும். மக்களாட்சி அரசு வெளியிட்ட சட்டமாயினும், மோசமான சட்டங்களை மக்கள் மதித்துப் பணியார். மக்கள் எதிர்பாக விளங்கியமையால் 1964-ல் வெளியிடப் பெற்ற தங்கப் கட்டுப்பாடுச் சட்டத்தினை அரசினால் செயல் படுத்துவது அடிமையாயிற்று. முறையாக செயல்படுத்த இயலவில்லை.

அரசு மக்களுக்கு நலம் விளைவிக்க அமைந்தது. எனவே, சட்ட விதிகளுக்கு மக்கள் கீழ்பணிய வேண்டும். சட்ட விதிகளுக்குக் கீழ்படிதலுக்கு பழக்கமும் ஒரு காரணமாகும். சட்ட விதிகளை மீறும் நபருக்கு கடும் தண்டனைகள் உண்டு. ஆகையால் அச்சத்தின் காரணமாக சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடக்கின்றனர். இவ்வாறு பல காரணங்களை எடுத்தக் கூறலாம்.

1. கடமையின் வகைகள் Kinds of obligation:

அறநெறிக் கடமை  Moral obligation:

அறநெறிக் கோட்பாடுகள் அரசினால் விதிக்கப்பட்டவை அன்று. சமுதாயத்தின் அறநெறிச் சார்ந்த கொள்கைகளை தனி நபர் ஏற்றிட காலங்கள் செல்லச் செல்ல சமுதாயம் அறநெறி சார்ந்த தார்மீக மரபுகளை மெல்ல உருவாக்கியது. சமுதாயத்தில் அநநெறிக் கொள்கைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. சமுதாயத்தின் ஒழுக்க நெறிக் கோட்பாட்டின் அடிப்படையில் வாழ்கின்றனர். தனிநபர் அண்டை அயலாரிடம் நல்ல எண்ணத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். விருந்தினர்களிடம் நல்ல வரவேற்பு, வயதான பெற்றோரைக் கவனித்தல், ஏழைகளுக்கு உதவுதல் முதலான கடமைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கடமைகள் சட்டபூர்வ அடிப்படையில் சமுதாயத்தையோ, தனி நபர்களையோ கட்டுப்படுத்தாது. அதனால் இவற்றை நிறைவேற்றவில்லை யெனில் தண்டிக்க முடியாது.

அறநெறி முறையினை கடைபிடித்து வாழும் ஒருவனைச் சமுதாயத்தி லிருந்து ஒதுக்கி வைத்தலைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. யாருக்கு எதிராகவும் கட்டாயப்படுத்தும் அதிகாரம் சமுதாயத்திற்குக் கிடையாது. அறநெறிகள் அரசினால் விதிக்கப் பெற்றவை இல்லை. அதை செய்யாமைக்காக யாரும் யாரையும் தண்டிக்க முடியாது. மேற்கூறப்பட்ட அனைத்தும் மக்களின் அறநெறிக் கோட்பாடுகளாக வளர்ந்தவையே எனவே, இக்கோட்பாடுகளை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அறநெறிக் கோட்பாடுகள் அனைத்தும் அறநெறி கடமைகளாகி விட்டன. இவைகளை மக்களே உணர்ந்து செயல்பட்டு பயன்பெற்றதனால் அவைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தவில்லை. இவ்வாறு அறநெறிக் கோட்பாடுகள் உள்ளன.

தனிமனித சட்ட விதிகளின் கடமை Individual Legal Obligation:

தனிமனிதன் சட்டக் கடமைகளை நிறைவேற்றத் தவறுகையில் அரசு தலையிட்டு அவரைத் தண்டிக்கும் இந்த கடமைகள் தனி நபரைச் சட்டப்படி கட்டுப்படுத்தும். தார்மீகக் கடமையில் தவறியவனைத் தண்டிக்காத அரசு, வரி பாக்கி இருந்தால் தனி நபரைத் தண்டிக்கும். சட்டத்திற்குக் கட்டுபடுவது தனி நபரின் கடமை. அதை மீறினால் தண்டனைக்குள்ளாவார். அரசின் சட்ட விதிகள் அனைத்தும் சட்ட விதிகளின் கடமைகளைக் கூறும் தொகுப்பாக அமையும். சட்டங்கள் உருவாக்கப்பட்டு எழுதி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் செய்யத்தக்க செயல்களையும் செய்யத் தகாத செயல்களையும் நன்கு பிரித்துக் காட்டப் பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமனிதனும் சட்ட விதிகளின் கடமைகளை பின்பற்றுதல் வேண்டும். இக்கடமைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

நேரான கடமைகள் Positive Obligation:

மக்கள் சில கடமைகளை செய்ய வேண்டுமென அரசு எதிர்பார்க்கின்றது. அவை அனைத்தும் மக்கள் செய்ய வேண்டிய முக்கியமானதாகும். அரசு மக்களிடம் எவற்றை எல்லாம் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றதோ அவைகள் அனைத்தையும் தனிப்பட்டவர்கள் செய்தல் வேண்டும். இவைகளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதனால் இவற்றை நேரான கடமை 61601 அழைக்கப்படுகிறது. அரசுக்கு வரி செலுத்துதல், வயது வந்தோர் வாக்களித்தல், அரசியல் அமைப்பில் இடம் பெற்றுள்ள கடமைகளைச் செய்தல் போன்றவை இக்கடமையில் அடங்கும். சமுதாய நலனின் கவனம் செலுத்துதல் போன்றவையும் இதில் அடங்கும்.

எதிர்மறை கடமைகள் Negative Obligation:

அரசானது தன் நாட்டின் மக்கள் ஒரு சில செயல்களை செய்யக் கூடாது என்று தடை விதித்து இருக்கும். எனவே, அவ்வகையான செயல்களை எவரும் செய்தல் கூடாது. இவையே எதிர்மறை கடமைகள் என்றழைக்கப்படுகிறது. எதிர்மறைக் கடமைகள் என்பனவற்றில் மதுவிலக்கைக் குறிப்பிடலாம். அடுத்தவரை ஏமாற்றுதல், வலிய தாக்குதல், கொலை செய்தல் ஆகியவை குற்ற விதிகளால் தடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறும் தனிநபர் தண்டிக்கப்படுவார். உள்நாட்டில் அமைதி ஒழுங்கினை சீர்குலைப்து, கொலை கற்றம் புரிதல் ஆகியன குற்ற விதிகளால் தடுக்கப்பட்டுள்ளன. தனி மனிதன் இவற்றை மீறி செயல்படும் போது அவன் தண்டிக்கப்படுகிறான்.

சில முக்கியக் கடமைகள் Some Important Obligation:

தனி நபர் குடிமகனோ இல்லையோ அரசின் சட்டங்களுக்கு கீழ்படிதல் வேண்டும். சட்டத்தினால் தடுக்கப் பெற்றதை அவன் செய்தல் கூடாது. அயல்நாட்டவராயினும் தேராய எதிர்மறைச் சட்டங்களுக்குப் பணிய வேண்டும். நாட்டில் உள்ள அனைவரின் தன்மைக்கும் மிகவும் இன்றியமையாதவை என்று இருப்பவைகளை அந்நாட்டின் குடிமக்கள் நிறைவேற்ற வேண்டும். அவற்றை பின்வருமாறு காணலாம்.

  • சட்டங்களுக்குக் கீழ்படிதல்
  • தீய சட்டங்களை எதிர்த்தல்
  • அரசுக்கு முழு விசுவாசம் செலுத்துதல்
  • வரி செலுத்துதல்
  • வாக்களித்தல்
  • சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசுக்கு உதவுதல்

சட்டத்திற்குப் பணிதல் :

தனி நபரின் தலையாய கடமை அரசின் சட்டங்களுக்கு பணிதல் ஆகும். இந்தக் கடமையினை முறையாக நிறைவேற்றவில்லையெனில் குழப்பமும், ஒழுங்கின்மையும் காணப்படும். சட்டத்திற்கு கட்டுப்படும் குடிமகன் அரசின் சொத்தாவான். காவல் துறை அமைப்பும் நன்க அமைக்கப் பெற்ற நீதித் துறையும் சட்டத்தை மீறுவோரைக் கவனிக்க உள்ளன. ஒவ்வோர் அரசும் இயங்க உதவும் அரசியல் சட்டம் மக்களின் நல்விருப்பம். மக்களின் கூட்டறவு ஆகியவற்றைப் பொருத்தது.

தீய சட்டங்களை எதிர்த்தல்:

சட்டம் என்பது ஒரு முடிவை அடைய உதவும் வழியேயன்றி முடிவு அல்ல. ஒரு சட்டம் நன்மை செய்யவில்லையெனில் அதனை மாற்றி விட வேண்டும். சட்டமன்றத்தில் பெரும்பாண்மையின் விளைவால் அரசு தீமை விளைவிக்கும் சட்டங்களை இயற்றினால் அச்சட்டங்களை எதிர்த்திட வேண்டும். அப்படி எதிர்க்கவில்லையெனில் குடிமகன் கடமை தவறியவன் ஆவான். கிரீன், லாங்கி அத்தகைய எதிர்ப்புரிமையை என்கின்றனர். நல்ல குடிமகன் நல்ல சட்டத்தை ஏற்றுத் தீய சட்டத்தை எதிர்க்கிறான். தவிர்க்கவியலாத சூழ்நிலையிலேயே சட்ட எதிர்ப்பு அமைதல் வேண்டும். மருந்தை போல எப்போதாவதுதான் அவை அமைய வேண்டும். தேவையான செயல்களுக்கு மட்டுமே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அரசுக்கு விசுவாசம் காட்டல்:

குடிமகன் அரசிற்கு விசுவாசமாக விளங்கி அதற்குக் கட்டுப்பட வேண்டும். உள்நாட்டுக் கலவரங்களின் போது அயல்நாட்டுப் படையெடுப்பின் போது அரசை உண்மையாக ஆதரிக்க வேண்டும். அவசர காலங்களில் கட்டாயப் படை பணிக்கு அழைக்கப் பெற்றால் ஏற்றுப் பணி புரிய வேண்டும்.

வரி செலுத்துதல் :

அரசு இயந்திரம் இயங்கப் பொருள் இன்றியமையாதது. மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கவும் பொருள் தேவை. சரியான நேரத்தில் வரிகள் முழுமையும் செலுத்திடல் வேண்டும் நல்ல குடிமகன்.

தீய சட்டங்களை எதிர்த்தல்:

சட்டம் என்பது ஒரு முடிவை அடைய உதவும் வழியேயன்றி முடிவு அல்ல. ஒரு சட்டம் நன்மை செய்யவில்லையெனில் அதனை மாற்றி விட வேண்டும். சட்டமன்றத்தில் பெரும்பாண்மையின் விளைவால் அரசு தீமை விளைவிக்கும் சட்டங்களை இயற்றினால் அச்சட்டங்களை எதிர்த்திட வேண்டும். அப்படி எதிர்க்கவில்லையெனில் குடிமகன் கடமை தவறியவன் ஆவான். கிரீன், லாங்கி அத்தகைய எதிர்ப்புரிமையை என்கின்றனர். நல்ல குடிமகன் நல்ல சட்டத்தை ஏற்றுத் தீய சட்டத்தை எதிர்க்கிறான். தவிர்க்கவியலாத சூழ்நிலையிலேயே சட்ட எதிர்ப்பு அமைதல் வேண்டும். மருந்தை போல எப்போதாவதுதான் அவை அமைய வேண்டும். தேவையான செயல்களுக்கு மட்டுமே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அரசுக்கு விசுவாசம் காட்டல்:

குடிமகன் அரசிற்கு விசுவாசமாக விளங்கி அதற்குக் கட்டுப்பட வேண்டும். உள்நாட்டுக் கலவரங்களின் போது அயல்நாட்டுப் படையெடுப்பின் போது அரசை உண்மையாக ஆதரிக்க வேண்டும். அவசர காலங்களில் கட்டாயப் படை பணிக்கு அழைக்கப் பெற்றால் ஏற்றுப் பணி புரிய வேண்டும்.

வரி செலுத்துதல்:

வாக்குரிமையைப் பயன்படுத்தி வாக்கு அளித்தல் அரசுப் பணியில் பணிபுரிதல் ஆகியன சில இன்றிமையாத பணிகளாகும். வாக்காளர் தான் மக்களாட்சியில் அரசாங்கத்தை உருவாக்குபவர். எனவே, வாக்குரிமை என்பதன் முதன்மை நிலையினை உணரலாம். வாக்களிப்பது போல் அரசுப் பணியில் ஈடுபட்டாலும் சிறப்பு கடமை தான்.

அரசுடன் ஒத்துழைத்தல்:

வளர்ச்சி பெற்ற நாடுகளில் மக்கள் பொது நல உணர்வுடன் அரசுடன் முழுமையாக ஒத்துழைக்கின்றனர். தேவையான அளவு பொதுமக்கள் ஆதரவினை பெரிதும் நாகரிகமடைந்த நாடுகளில் பெறுவது போல் பின் தங்கிய நாடுகளில் பெறுவதில்லை. கல்வியறிவற்ற அறியாமையில் உலவும் சுயநலமிகு மக்கள் அரசுக்கு தாங்கள் இயற்ற வேண்டிய கடமையை உணர்வதில்லை. மக்கள் நலனக்கும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் பொது மக்கள் ஆதரவு இன்றியமையாதது. தவறு செய்யும் அரசினைக் சுட்டிக் காட்டி ஆக்க பூர்வ விமர்சனம் செய்வதும் கடமைகளில் ஒன்று ஆகும். அரசாங்கத்தால் இயற்றப்படுகின்ற சட்டங்கள், செயல் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய அலுவலர்கள் அரசாங்கத்திற்கு பக்க பலமாக இருத்தல் வேண்டும்.

M. Harisankar

B.Com From V.O Chidambaram College, Thoothukudi - Graduated 2022.

Post a Comment

Previous Post Next Post

Popular Items

Page 3 journalism