கில்ஜி பேரரசின் மறைவு

கில்ஜி பேரரசின் மறைவு

கில்ஜிக்கள் முப்பது ஆண்டுகள் ஆண்டனர். மூன்று முதன்மையான ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆனால் எவரும் பொதுவாக மக்கள் ஆதரவு பெற்றவர்கள் அல்லர். இந்துக்கள் இசுலாமியச் சுல்தான்களை எதிர்ப்பது என்பது இயல்பே. ஆனால் கில்ஜிக்கள் இசுலாமியர்களையும் கவர்ந்திடவில்லை. ஜலாலுதீனின் தாராளம், நல்லியல்புகள், இளைய கில்ஜிகளுக்கும், பால்பனுடைய உயர்குடியினருக்கும் வெறுப்பை ஏற்படுத்தின. பதினாறு ஆண்டுகள் அலாவுதீன் கில்ஜி ஆண்டபோதும் ஒருவரும் அவரை விரும்பவில்லை. முபாரக்ஷாவின் கொடுங்கோண்மை நண்பர்களை எதிரிகளாக்கியது. இதனால் விரைந்து இம்மரபு முடிந்தது.

இரண்டாவது இம்மரபின் அரசர்கள் நம்பக் கூடாதவர்களை நம்பித் துரோகிகள் என்று அறிவுறுத்திய பின்னும் நம்பினர். ஜலாலுதீன் அலாவுதீனை நம்பி ஒழிந்தார். கபூரின் ஆலோசனையின் பேரில் மகனகளையும், மனைவியையும் சிறையலடைத்த அலாவுதீன் அவராலேயே நஞ்சிட்டுக் கொல்லப் பெற்றார். இதுபோலவே குத்புதீன் முபாரக்ஷா குஸ்ருவை நம்பி இறந்தார். இவர்களில் அலாவுதீனே திறமை மிக்கவர். கபூர் குஸ்ரூவின் தீய செல்வாக்கின் உடைய கில்ஜி மரபு 1320-ல் வீழ்ந்தது.

சிறிது காலமே மேலாதிக்கம் செலுத்திய போதும் இந்திய வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்றனர். இன உயர்வைக் கடந்து, அனைவரையும் சமமாகக் கருதிக் குடிமக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் உயர்பதவி அளித்தார். டெல்லிச் சுல்தானியத்தின் அடித்தளத்தை உருவாக்கினார். அதன் சிறப்பை இருமடங்கு உயர்த்தினர். மங்கோலியர் எனும் வலிமை மிக்க இந்திய எதிரிகளை இந்திய மண்ணை விட்டுத் துரத்தினர். டெல்லிச் சுல்தானியத்தின் இயல்பான எல்லையாக நதியை மாற்றினர். அரசில் பல பரிசோதனைகள் மேற்கொண்டனர். தக்காணத்தின் வெற்றிக்கு வாயிலைத் திறந்தனர்.

அவர்கள் கலை, இலக்கியத்தை ஆதரித்தனர். ஏராளமான அழகுச் சின்னங்களால் பேரரசை அழகு செய்தனர். அவர்களுடைய அவையில் அறிஞர்கள் பலர் இருந்து பாரசீக இலக்கிய வரலாற்றில் கில்ஜி ஆட்சியினை மறக்க இயலாதாக ஆக்கினார். இவ்வகையில் கில்ஜியின் ஆட்சி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

M. Harisankar

B.Com From V.O Chidambaram College, Thoothukudi - Graduated 2022.

Post a Comment

Previous Post Next Post

Popular Items