பாவகங்களின் காரகங்களும், தன்மைகளும்

பாவகங்களின் காரகங்களும், தன்மைகளும்

பாவகம்:-

பாவகம் என்றவுடனேயே இது எதுவோ பாவம் என்று எண்ண வேண்டாம். இதற்கு முன் பயின்ற கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள் ஆகிய பாடங்கள் அனைத்தும். ஜோதிடவியலின் பொது அடிப்படை விசயங்களை கூறுகின்றன. ஆனால் பாவகங்கள்தான் ஒரு தனி மனிதனின் ஜாதகத்தை அறியவும், ஆராயவும் உதவுவது ஆகும். ஒருவரின் அனைத்து விசயங்களையும் நமக்கு தெரிவிப்பது இந்த பாவகங்கள் தான்.

எனவே, முன் பாடங்களில் உள்ள அடிப்படை காரகங்களை பயன்படுத்தி தனி ஒரு மனிதனின் வாழ்க்கையை அறிவது. இந்த பாவகங்கள் மூலம் தான். எனவே இதை மிக கவனமாக படித்து மனதில் நிறுத்த வேண்டும். நம்மிடம் ஜாதகம் பார்க்க வரும் பலவகையான மனிதர்களின், பல்லாயிரக் கணக்கான கேள்விகளுக்கு இதன் மூலமாகத்தான் நாம் பலனுரைக்க வேண்டும்.

1. இலக்ன பாவகம் (இலக்னம், முதல்வீடு):

ஜென்ம லக்னம், முதல்வீடு எனப்படும் முதல் பாவகமானது ஒருவரின் பிறந்த சமயத்தை குறித்து கணக்கீடுகள் செய்து இராசி மண்டலத்தில் அவர் பிறக்கும் போது சூரிய உதயத்தின் கதிர்கள் எந்த புள்ளியில் விழுகிறதோ அதுவே இலக்னமாகும். இது அந்த ஜாதகரின் முழு விபரப்பட்டியலை உரைப்பது ஆகும்.

வீரம், ஒழுக்கம், மகிழ்ச்சி, துன்பம், உண்மையறிதல், புகழ், கனவு, வலிமை, கண்ணியம், அமைதி, தற்பெருமை, கெளரவம், தனிதிறமை, செயல்பாடு, நிறைவு, களங்கம், தந்திரம், கர்வம், உடல் ஊனம், தனிசுபாவம், அறிவு, எண்ணம், கீர்த்தி, வாழ்நாள், குணம், பக்தி, பலம், புலமை, சுகவாசம், தேஜஸ், கொடைகள், பிரபலம், இழுக்கு, உருவ அமைப்பு, மொத்த உடல், தலை, தலைமுடி, ஆயுள், தோற்றம், தோல், மனம், முதுமை, தேகம், அவயம், இயல்பான உயரம், நிறம், ஆரோக்யம், இலட்சணம், ஆண்மை, பெண்மை, சந்தோஷம்.

இரண்டாம் பாவகம்

2. தனம், வாக்கு, குடும்பஸ்தானம்:

பணவரவுகள், செல்வம், மரணம், புதையல் அமைப்பு, குடும்ப அமைப்பு, குதூகலம், தானம், தர்மம், கண், கண்நோய்கள், வாக்குபலிதம், பேச்சுகள், கடுஞ்சொல், பொய், உண்மை, பற்கள், முகம், புன்னகை, நாக்கு, மூக்கின் அமைப்பு பிளவுபட்டது தடுகள், வழக்காடும் திறமை, எச்சில், சாப்பாடு தட்டம், வசதிகள், ஆரம்ப மழலை கல்வி, உணவு, திடீர்பணம், செல்வசெழிப்பு, கலாச்சாரம், மதநம்பிக்கை, உதவுதல், நகங்கள், ஆடைகள், வணிகஎண்ணம், கஞ்சத்தனம், நெறிதவறாமை, அடக்கம், வாழ்க்கைத்திறன், ஐதீகநம்பிக்கை, நேர்மை, வர்த்தகம், விவேகம், அதிர்ஷ்டம், ஊதியம், லாபம் வரும் தன்மை, கருத்து கூறுதல், ஞாபகசக்தி, தாடைகள், கன்னங்கள், ஊதாரித்தன்மை, கேள்விஞானம்.

மூன்றாம் பாவகம்

3. தைரிய, வீரிய, விஜய, சகோதரஸ்தானம்:

உடன் பிறப்புகள், பிரபுத்துவம், வாலிபம், தனிமை, கலையும் கரு பலமான அன்பு, பினைப்பு, சகோதரபிரிவுகள், ஒப்பந்தம், வெகுமதி, சன்மானம், தைரியசாலி, உயிரணுக்கள், வீரம், சிற்றின்பம், மனஉறுதி, விலங்குபயம், சாந்தம், பயம், சொல்பேச்சு கேளாமை, விஷம், சங்கீதம், கடுக்கண், உணவு தானம் செய்தல், தாது, மூலம், ஜீவன், சிறுபயணம், மார்பு, இரக்கசுபாவம் முன்னோர்கடன், கனவுகள், போர்முறைகள், காதுகள், ரோட்டோரம், மனகுழப்பம், அலைச்சல்கள், தொண்டை, வேலையாட்கள், சகபிரயாணி, சாகசங்கள், மேஜிக், உலகசாதனை, படிப்பில்கவனம், புதியவர்கள், மதகடமைகள், பக்கத்துவீட்டார், பித்துபிடித்தல், பயிற்சிகள், எதேச்சையான சந்திப்பு, தொடர்பு ஏற்படுத்தும் பொருட்கள், அச்சுமை, தூதுவர், நாட்டாமை, பஞ்சாயத்தார், ஓய்வில்லாமல் அலைதல், கையெழுத்து, கைகள், உடல்பயிற்சி சாதனங்கள், தோள்பட்டை, கழுத்துபகுதி, புஜபலம், பிளாட்பாரகடைகள், அரசகாரியங்கள், அரசானைகள், திருவிழா, சங்கீத உணர்வு, சமையல் பாத்திரங்கள், கடன் வரும் அமைப்பு, கடவுள்பக்தி, ஞாபகசக்தி, புரளிசொற்கள், வதந்திகள், குசலமூட்டுதல், சங்கதிசொல்பவர், குத்தகை பொருட்கள்.

நான்காம் பாவகம்

4. சுக, தாய் ஸ்தானம் :

சொத்து, பொருட்கள், வாகனம், ஆடம்பர பொருள், அழகிய பொருட்கள், ஆரம்பகல்வி, விவேகம், நகைகள், உடைகள், (பொதுவாக ஒரு மனிதனில் அனைத்து பொருட்களும் நான்காம் பாவகத்தை கொண்டே கூறுதல் வேண்டும்) புன்னியகாரியங்கள், வெகுமதிகள், புதையல், போகம், சுகம், தூக்கம், கனவில் நடப்பவை, வாசனை திரவியங்கள், கால்நடைகள், வீடு, நிலம், காடு, தோப்புகள், வளர்ப்பு பிராணிகள், வாகனயோகம், குதிரை, யானை போன்ற ஆடம்பர விலங்குகள், பல்லாக்கு, சாமரம், காற்றுவீசும் இடங்கள், மண்வகைகள், வெண் கொற்றகுடை, சிம்மாசனம், கிணறுகள், மின்சாரப்பொருட்கள், அலங்கார விளக்குகள், தூபம், இடிபாடுகள், இருதயம், உறவுகள், நுரையீரல், உல்லாசபடகு, எண்ணெய் குளியல், நற்பெயர், நம்பிக்கை, கூடாரம், துப்பாக்கி, விளையாட்டு சாதனங்கள், மனைவியின் தொழில், சேமிப்புகள், எறும்புபுற்று, கோபுரம், வாஸ்துவீடு, கோயில்கள், தானியங்கள், ராஜ்யவெகுமதிகள், நற்பெயர், போர்வெல், கல்லறைகள், பழங்கள், புல்தரை, சுரங்கம், ஞாபகபொருட்கள், பழமையான பொருட்கள், கல்லூரிகட்டிடம், குளங்கள், சிறுவணிகம், சித்தவைத்தியம், மூலிகைபொருட்கள்.

ஐந்தாம்பாவகம்

5. பூர்வ புண்ணிய, புத்திரஸ்தானம் :

கற்பனை, அறிவு, சந்திப்புகள், காதல், விரும்பும் பொருள், கலைகள், ஜோதிடம், ஆன்மீகம், குலதெய்வம், மதிப்புமரியாதை, பிரபலங்களின்பகை, குழந்தைபிறப்பு, ஆண் பெண் வாரிசு, பெரும் செல்வம், பேரப்பிள்ளைகள், பாட்டன் சொத்து, புதையல், எதிர்காலம், இன்பம், வாலிபசுகம், தத்துப்பிள்ளை, யோகம், பிரதாப செயல்கள், நல்லதீயகுணங்கள், நாத்தீகவாதம், தாய்மாமன், வயிறு, மந்திரங்கள், சீட்டுசேர்க்கை, புத்தகம் இயற்றுதல், சாஸ்திரவித்தை, குருஅமைவது, தந்தையின் புண்ணிய காரியம், அரசருக்கு இணையானவர், அமைச்சர்கள், இயந்திரஉதவி, கற்பித்தல், முன்கூட்டி அறிதல், எழுத்துகள், பாவபுண்ணிய செயல்கள், அனைத்து வகை கலைகளின் கருவிகள், திருவிழாக்கள், ரகசியங்கள், சுவைகள், பொழுதுபோக்கு சாதனங்கள், சூதாட்டம், புதிர்விளையாட்டு, போட்டி தேர்வுகள், டெஸ்டுப்பேபி, மறுஜென்மம், கற்பழிப்பு, பகுத்தறிதல் உயிரணுஉற்பத்தி, கருமுட்டைகள், லாட்டரிசீட்டு.

ஆறாம்பாவகம்

6. ருண, ரோக, சத்ருஸ்தானம் :

கடன், நோய் வம்புகள், வழக்குகள், சோர்வு, பகைமைகள், விரோதி, கால்நடைகள் விற்பனை, பயம், துன்பம், புண், காயம், திடிர்அதிர்ஷ்டம், புதையல், அரசுக்கு எதிரான செயல்கள், கெட்ட சம்பவங்கள், கோர்ட் விசயங்கள், சிறைபடுதல், திருடுபோதல், மறதி, பசி, தாகம், சிறுவிபத்து, உடல் ஊனம், இடையூறுகள், மனநோய், மனைவியின் வெளிநாடு பிரயாணம், தடங்கல், வருத்தப்படும் விசயங்கள், கடுமையான செயல்கள், கட்டி, புண், வெட்டுபட்டகாயம், முறையில்லாத உணவு பழக்கம், பிச்சை எடுத்தல், பராமரிப்பு, தொழிலாளிகள், உதவியாளர்கள், வேலையாட்கள், சுகாதாரமின்மை, விசமூலிகைகள், வாகன அழிவு, பங்காளிகள், நீரால் ஆபத்து.

ஏழாம் பாவகம்

7. களத்திரஸ்தானம்:

நண்பர்கள், கணவன் or மனைவி, காமம், இச்சை, விருப்பப்படல், பெண்போகம், முறையற்ற இன்பம், திருமண அமைப்பு, நேசம், விதவையாதல், மாரகம், மரணத்தின்வழி, இல்லற உறவு, கூட்டுவியாபாரம், யாத்திரைகள், பங்குமார்க்கெட், மர்மஸ்தானம், ஆண் பெண் குறி, காதல் வெற்றியினால் திருமணம், தாசியர்கள், வாசனை திரவியங்கள், மலர்கள், தாம்பூலம், உயிரணுக்கள், சிறுநீர்பைகள், அன்பளிப்பு, பதுக்கியபணம், கற்பு, பிரயாணத்தில்தடை, வெளிநாடு செல்ல தூண்டுதல், இணையான சொத்து, விசாரணை செய்தல், தெருவில் சண்டையிடுதல், விவாகரத்து, பொதுகூட்டம், யுத்தகளம், அந்தரங்க எதிரிகள், சட்டதிட்டம், அபராதகுற்றங்கள், உறவிணர்வரவு, அலங்காரம்.

எட்டாம் பாவகம்

8. ஆயுள்ஸ்தானம் :

சிறுவயது மரணம், வெட்டுபடல், வாகனவிபத்துகள், இயந்திர பாதிப்பு, விசஜந்துகளால் கடிபடல், தீராத நோய்கள், ஊனம், அம்மைநோய், வைரஸ் காய்ச்சல்கள், உடல் துர்நாற்றம், அவமானம், பெருஞ்சண்டைகள், மாங்கல்யஸ்தானம், மனைவியின் சொத்து, சீர்வரிசைகள், திடீர்லாபம், கணக்கில் வராத பணங்கள், புதையல், சட்ட விவகாரம், அரசுக்கு எதிரான காரியங்கள், அடிமைபடுதல், அகதிகள், உயிர்களை துன்புறுத்துதல், இருட்டுஅறைகள், கடுமையான சிறை, முறையில்லா மகிழ்ச்சி, குறுக்குபுத்தி, கிரிமினல்கள், இன்சூரன்ஸ், பில்லிசூன்யம், போட்டி போட்டு 26000624 உண்ணுதல், இரட்டை ஜடை, பெரும்கோட்டைகள், அச்சப்படுதல், கொள்ளையடித்தல், உடல் உறுப்பு குறைவு, போர்கள், அணுஆயுதங்கள், தளவாடகருவிகள், பெரிய பெரிய வாகனம், தோல்விகள், பால்வினைநோய்கள், அரசதண்டனை, நீண்டகால சொத்துகள், பேய்கதைகள், மர்மதொடர்கள், மிக கடுமையான செயல்கள், தீராததுயரம், உரிமை பிரச்சனைகள், மரணத்திற்கான பொருள், கடைசிகால பத்திரம், நம்பிக்கை மோசடி, தேவையில்லாமல் பங்கு வருவது, கசாப்புக்கடை, தனிமையான இடம், நிலநடுக்கம், பூகம்பம், ஹேர்மார்கட்டிங்

ஒன்பதாம் பாவகம்

9. பாக்கியஸ்தானம், தந்தை, தர்மஸ்தானம்:

ஆனந்தமான வாழ்வு, குலதெய்வவழிபாடு, யோகங்கள் அனுபவித்தல், சிவபூஜைகள், தனவான், சீமான், எஜமானர், அறிஞர்கள், இயந்திர சுகம் பெறுதல், பொருட்கள் சேர்க்கை, விருதுகள், மந்திரிகள், அமைதியான வாழ்வு, நிறைவான செல்வம், உயர்கல்விக்கான வழி, மனசஞ்சலம், ஆசிரியர்கள், பூஜைபுனஸ்காரங்கள், மந்திரஉபவாசம், தர்மம் செய்தல், கொடைகள், பாக்கியம், ஐஸ்வரியம், பெரியோரை மதித்தல், சிலை வழிபாடுகள், வள்ளல் குணம், பெற்றோர் மரியாதை, சாஸ்திரவித்தைகள், வேதங்கள், அன்னதானம், முப்பாட்டன்வழி, வேள்விகள், யாகங்கள், கடல்பயணம், தீர்த்தயாத்திரைகள், கோவில் திருப்பணி, அஷ்டமகாசித்துகள், புண்ணியம், பாவத்தின் தண்டனை, மருந்து பொருட்கள், மனஒழுக்கம், புராணங்கள், சத்து நிறைந்த உணவுகள், பெரியவகை விலங்குகள், மததலைவர், உண்டியல்பணம், தந்தை மகன் உறவுகள், விசுவாசம், கிராமதலைவர், ஆராய்ச்சிகள், சட்டபோதனைகள், நூல்வெளியிடுதல், அயல்நாட்டு விவகாரம், அறிமுகப்படுத்துதல், சாவடிகள், வனங்கள், மலையேற்றம், ஞானிகள், சித்தர்கள்.

பத்தாம் பாவகம்

10. கர்மஸ்தானம், ஜீவனஸ்தானம் :

செய்தொழில், புனிதநீராடல் புண்ணிய செயல், சாகசங்கள், சாதுர்யம், வேள்விகள் நடத்துதல், வஞ்சகம், நேர்த்தியான செயல்கள், புகழ் அடைதல், கௌரவம், யோகப்பயிற்சிகள், கலைகள் பயிற்சி, புனித ஸ்தலங்கள், கடமையை செய்தல், சாஸ்திரம் அறிதல், வருமானம், சேமிப்பு, ஆசாரங்கள், பிரம்மச்சாரி, சத்தியம், சக்ரவர்த்தி, ஆண்டிகள், போதை மூலிகைகள், சூரிய நமஸ்காரம், ஆத்மதிருப்தி, பாவிகள், குலவிளக்கு பெண்களின் அதிர்ஷ்டம், காத்தல், அலைச்சல்கள், செல்வ செல்வாக்கு, மரியாதைக்குரியவர், முகபொலிவு, அடிமைகள், அரசு உத்யோகம், அதிகாரத்தன்மை, கர்மகாரியங்கள், வணிகம், அரச வெகுமதி, சேவைகள், தியாகம் செய்தல், அடையாள முத்திரைகள், தொண்டு நிறுவனம், வைத்தியம் செய்தல், தலைமை தாங்குதல், மாந்திரீகம், குலப்பெருமைகள், சடங்குகள், மழையளவு, தேசத்தலைவர்கள், நெறி முறைகள் சொத்து பத்திரம். பராக்கிரமம்,

பதினோராம் பாவகம்

11. லாபஸ்தானம் :

படிப்படியான முன்னேற்றம், பதவி உயர்வு, கீர்த்தி, புகழ், சந்தோஷம், ஒரு ஜாதகரின் அனைத்து விதமான வெற்றிகள், அறநெறி, ஆதாயங்கள், சன்மானம், புதையல், அதிர்ஷ்டம், திரவியலாபம், வேந்தர்கள், மூத்த சகோதரம், இடது காது, கணுக்கால், பல்கலை கழகங்கள், முதல்வர்கள், அனைத்து வகை பொருள் சேர்க்கை, உயரிய கல்விகள், தீயவிருப்பம், பிறரை நம்புதல், கூர்மையான அறிவு, புலமை பெறுதல், விரும்பிய குறிக்கோளை அடைதல், பிறர் மூலம் சேரும் பணம், அழகிய ஓவியம், ஊழியர்கள், பீடாதிபதிகள், அன்பளிப்பு, நண்பனின் வீடு, ஆதரவாளர்கள், அபிவிருத்தி, கடித போக்குவரத்து மிக நீண்ட பொருட்கள், புதிய தீர்மானங்கள், பொன் நகைகள் சேர்க்கை, பலதாரம்.

பணிரெண்டாம் பாவகம்

12. விரையஸ்தானம் :

பொருள் விரயம், நஷ்டம், ஓடிப்போதல், வெளிநாடு வாழ்க்கை, காட்டில் அலைதல், சித்தமின்மை, ஞானிகள், மோட்சம், ஊதாரித்தன்மை, இழப்புகள், அரச தண்டனை, முக்திக்கான வழி, படுக்கை சுகம், உறக்கம், கனவின் விளைவுகள், நரகம், அயன, சயன, போகஸ்தானம், செலவுகள், உணவுகள், உடல் உறவுகள், மறுபிறவி, தற்கொலை எண்ணம், சாதி மாறுதல், விழித்து எழுதல், கால்பாதங்கள், கடன் அடைத்தல், சொர்க்கம், விபத்தில் உடல் உறுப்பு, இழப்பு ஏற்படுதல், திருமண தடை, சிறைவாசம், இறப்புகள், திடீர் செலவுகள், மக்களின் விரோதி, வீரதீர செயல்கள், உயரிய விருதுகள், மனபோராட்டம், துரதிர்ஷ்டம், வீண்வாதங்கள், கஷ்டங்கள், வீணாக்குதல், குடும்பபிரிவினை, கலப்பு ஜாதியினர், ரகசியங்கள்.

M. Harisankar

B.Com From V.O Chidambaram College, Thoothukudi - Graduated 2022.

Post a Comment

Previous Post Next Post

Popular Items